உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை ஒளிபரப்பிய இணையதளங்களுக்கு சம்மன். டெல்லி நீதிமன்றம் உத்தரவு

9உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை அனுமதியின்றி ஒளிபரப்பும் இணையதளங்களை தடை செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் நடந்துவரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பலகோடி ரூபாய் முதலீடு செய்து வாங்கியுள்ளது. ஆனால் எவ்வித பணமும் செலவழிக்காமல் சில இணையதளங்கள் முறைகேடாக தங்கள் இணையதளங்களில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பி வருகின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த சோனி நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

‘கால்பந்து போட்டியை இந்தியாவில் ஒளிபரப்பு செய்ய எங்களுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வ உரிமை உள்ளது. ஆனால், இணையதளங்களில் வரம்பு மீறப்பட்டுள்ளது” என சோனி நிறுவனம் தனது மனுவில் கூறியிருந்தது.

இந்த மனுமீது அவசர நடவடிக்கை எடுத்த டெல்லி உயர்நீதிமன்றம், “உலகக்கோப்பை கால்பந்து போட்டியை உரிமம் இன்றி வெளியிடும் இணையதளங்களின் சேவையை முடக்க, பல்வேறு இணைய சேவை வழங்குபவர்களுக்கு (ஐ.எஸ்.பி.) உத்தரவிட்டார். மேலும், இந்தியாவில், அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு உரிமைகளை மீறும் விதமாக மற்ற இணையதளங்கள் எதுவும் ஒளிபரப்பு செய்வதை இனி கண்டுபிடித்தால் அதனையும் தடை செய்யவும் நீதிபதி காமேஷ்வர் ராவ் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து இதுவரை நேரடியாக கால்பந்து போட்டிகளை ஒளிபரப்பிய இணையதளங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் இணையதளங்கள் கால்பந்து போட்டியை முறைகேடாக ஒளிபரப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply