தினகரனுக்கு குக்கர் சின்னம்: தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு

தினகரனுக்கு குக்கர் சின்னம்: தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், இந்த சின்னத்தை தான் இனிவரும் தேர்தல்களிலும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மேலும் அவர் தனது மனுவில் உள்ளாட்சி தேர்தலில் எங்கள் வேட்பாளர்கள் வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட முடியாது என்பதால், பொதுவாக குக்கர் சின்னத்தை கேட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் உள்ளாட்சி தேர்தலை, மாநில தேர்தல் ஆணையம் நடத்துவதால் தங்களுக்கு அதிகாரம் இல்லை. எனவே தினகரன் அணியின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் என கூறி இருந்தது.

இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பின்படி9 தினகரனுக்கு குக்கர் சின்னம் மற்றும் அ.தி.மு.க. அம்மா என்ற கட்சியின் பெயரை வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இது தினகரனுக்கு கிடைத்த இன்னொரு வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply