நிர்பயா பாலியல் வழக்கு. இளம்குற்றவாளி விடுதலையை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

நிர்பயா பாலியல் வழக்கு. இளம்குற்றவாளி விடுதலையை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
nirbaya case
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவகல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளம் குற்றவாளியை விடுவிக்க தடை இல்லை என டெல்லி ஐகோர்ட் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவக்கல்லூரி பாலியல் வழக்கில் கைதாகி சீர்திருத்த பள்ளியில் தண்டனை அனுபவித்து வரும் இளம்குற்றவாளியின் 3 ஆண்டுகள் தண்டனைக்காலம் முடிவடைந்துள்ளது. கடந்த 16ஆம் தேதியே விடுவிக்கப்பட இருந்த அந்த இளம் குற்றவாளியின் விடுதலையை நிறுத்தி வைக்க வேண்டும் என பா.ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.  3 ஆண்டு தண்டனை அனுபவித்த நிலையில், இளம் குற்றவாளி திருந்தி விட்டான் என்றும், அவனால் சமூகத்துக்கு பிரச்னை ஏதும் இருக்காது என்றும் உறுதியாக தெரிகிற வரை அவனை விடுதலை செய்யக்கூடாது என்று டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரணை செய்த டெல்லி ஐகோர்ட், தண்டனை காலம் முடிந்த பின் சிறுவனை விடுவிக்காமல் இருக்க முடியாது என்று கூறி சுப்பிரமணியன் சுவாமியின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், மனுதாரரை ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், குற்றவாளியின் மறுவாழ்வுக்கான திட்டம் பற்றி ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் இது தொடர்பாக மத்திய, டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை மார்ச் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து இளம் குற்றவாளி நாளை மறுநாளுக்குள் விடுவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக மாணவியின் தயார் ஆஷா தேவி, அவனை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். “அவனை விடுதலை செய்தால், சமூகத்திற்கு நன்மையாக இருக்காது. அவனை விடுதலை செய்தால், அவனுடைய முகம் காட்டப்படவேண்டும்” என்று கூறினார்.

இவ்விவகாரத்தில் ஏற்கனவே மத்திய அமைச்சர் மேனகா காந்தி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், குற்றவாளி விடுதலை செய்யப்பட்ட பின்னரும் கண்காணிப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டு இருந்தார்.

Leave a Reply