அர்னாப் கோஸ்வாமிக்கு நோட்டீஸ்: டைம்ஸ் நெள தொடர்ந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் அதிரடி

 அர்னாப் கோஸ்வாமிக்கு நோட்டீஸ்: டைம்ஸ் நெள தொடர்ந்த வழக்கில் டெல்லி ஐகோர்ட் அதிரடி

டைம்ஸ் நவ் உடமையை ரிபப்ளிக் டிவியின் உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி தவறாக உபோகப்படுத்தியது குறித்த வழக்கில் பதிலளிக்குமாறு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏறபட்டுள்ளது

கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியராக பணியாற்றிவரும் அர்னாப் கோஸ்வாமி மீது டைம்ஸ் நெள வழக்கு ஒன்றை பதிவு செய்தது. அதில் அர்னாப் கோஸ்வாமி இதற்கு முன்னர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணியாற்றிய போது, சுனந்தா புஷ்கர் மற்றும் லல்லு பிரசாத் யாதவ் பேசிய ஆடியோ பதிவை தற்போது ரிபப்ளிக் டிவியில் சட்டத்திற்கு புறம்பாக உபயோகித்துள்ளார்.

அதோ போல் மே 8ஆம் தேதி ரிபப்ளிக் டிவியானது, டைம்ஸ் நவ் முன்னாள் நிருபர் பிரேமா ஸ்ரீதேவி மற்றும் சுனந்தா புஷ்கர் பேசிய ஆடியோவையும் ஒளிபரப்பியது. டைம்ஸ் நவ்வின் பணிபுரியும் போது அர்னாப் கோஸ்வாமியும், பிரேமா ஸ்ரீதேவியும் தயாரித்த ஆடியோ பதிவை தற்போது ரிபப்ளிக் டிவியில் முறைகேடாக உபயோகித்துள்ளனர். தொலைக்காட்சி தொடங்கும் முதல் மூன்று நாட்கள் அதனை ஒளிபரப்ப திட்டமிட்டு டைம்ஸ் நவ்வில் இருந்து ஆடியோ பதிவை திருடியுள்ளனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

“ரிபப்ளிக் டிவியில் ஒளிபரப்பப்பட்ட பின்பு தான் அந்த ஆடியோ பதிவு திருடுபோனது தெரியவந்தது. சொந்த சேனலுக்காக ஏற்கனவே பணிபுரிந்த சேனலில் இருந்து கன்டென்ட்டை திருடுவது மிகவும் தவறானது என்று டைம்ஸ் நவ் சேனலின் சிஇஓ எம்கே ஆனந்த கூறியுள்ளார். இந்நிலையில் அர்னார் கோஸ்வாமி மற்றும் பிரேமா குற்றவாளிகள் என்றும் வேண்டுமென்றே டைம்ஸ் நவ்வுக்கு சொந்தமான உடமைகளை திருடியுள்ளனர் என்றும் பிசிசில் குற்றம் சாட்டுகிறது.

இந்த நிலையில் ஊழியர் ஒப்பந்தத்தை மீறியது, டைம்ஸ் நவ் உடமையை தவறாக உபோகப்படுத்தியது என டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் முன்னாள் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Leave a Reply