கார்த்திக் சிதம்பரத்திற்கு ஜாமீன்: இன்று விடுதலை ஆவாரா?

கார்த்திக் சிதம்பரத்திற்கு ஜாமீன்: இன்று விடுதலை ஆவாரா?

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் 29-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 4 முறை அவரை விசாரணை செய்ய பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. டெல்லியில் தீவிரமாக விசாரணை செய்யப்பட்ட கார்த்தியை மும்பை அழைத்துச் சென்றும் சி.பி.ஐ விசாரித்தது.

இதனையடுத்து, தற்போது அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்த பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர் இன்று மாலை அல்லது நாளை காலை விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply