தினகரன் வெளிநாட்டுக்கு தப்பியோட முயற்சியா? சுற்றிவளைக்க டெல்லி போலீஸ் முடிவு

தினகரன் வெளிநாட்டுக்கு தப்பியோட முயற்சியா? சுற்றிவளைக்க டெல்லி போலீஸ் முடிவு

தேர்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் டிடிவி தினகரன் எந்த நேரமும் கைது செய்யப்படும் நிலை இருப்பதால் வெளிநாட்டுக்குச் செல்ல தினகரன் திட்டமிட்டுள்ளதாக, அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ள சிலர், டெல்லி போலீசாருக்கு துப்பு தெரிவித்துள்ளனர்

இதனால் தினகரனின் முயற்சியை முறியடிக்க, ஒத்துழைக்கும்படி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்களில் பணிபுரியும் குடியுறவு அதிகாரிகளுக்கு டெல்லி போலீஸ் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே தினகரன் வெளிநாட்டுக்கு தப்பியோட முடியாதவாறு அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

அதேசமயம் தன்னிடம் பாஸ்போர்ட்டே இல்லை என்றும், சட்டப்படி தன்மீதான நடவடிக்கைகளை எதிர்கொள்வேன் என்றும், தப்பியோடும் எண்ணம் இல்லை என்றும் தினகரன் கூறியுள்ளார்.

Leave a Reply