சென்னை அணியின் சொதப்பலான பேட்டிங். டெல்லி எளிதான வெற்றி

சென்னை அணியின் சொதப்பலான பேட்டிங். டெல்லி எளிதான வெற்றி

cricketஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் சென்னை அணி டெல்லி அணியிடம் படுதோல்வி அடைந்தது. நேற்றைய போட்டிகள் சென்னை அணி வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தனர்.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி வெறும் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 16.4 ஒவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக டெல்லியை சேர்ந்த ஜாகீர் கான் தேர்வு செய்யப்பட்டார். இவர் நான்கு ஓவர்கள் பந்து வீசி வெறும் ஒன்பது ரன்களை மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply