105 நிமிடங்களில் டெல்லி டூ ஆக்ரா. அதிவிரைவு ரயில் விரைவில் அறிமுகம்.

trainடெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு ஒன்றே முக்கால் மணி நேரத்தில் செல்லும் அதிவேக ரயில் ஒன்றை அடுத்த வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். மணிக்கு 160 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ரயில் டெல்லி ஆக்ரா இடையேயான தூரத்தை வெறும் 105 நிமிடங்களில் அடைந்துவிடும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு முறை இந்த ரயில் சோதனை ஓட்டம் செய்து பார்க்கப்பட்டது என்றும், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஒப்புதல் எந்த நேரத்திலும் கிடைத்துவிடும் என்று கூறிய ரயில்வே அதிகாரிகள் வரும் ஜூன் 9ஆம் தேதி இந்த ரயில் சேவையை தொடங்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தூள்ளனர்.

இந்த ரயில் மணிக்கு 160 கிமீ வேகத்தில் இயக்கப்பட உள்ளதால், பாதுகாப்பு ஆணையர் தெரிவித்த சில அச்சங்கள் களையப்பட்டுவிட்டதாக கூறியுள்ள ரயில்வே அதிகாரிகள் இந்த ரயிலுக்காக சில இடங்களில் ரயில் பாதைகளின் பக்கவாட்டில் வேலி போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

‘கட்டிமான் எக்ஸ்பிரஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலுக்கான பயணக் கட்டணம் சதாப்தி ரயிலில் உள்ளதைவிட 25 சதவீதம் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதேபோன்ற ரயிலை கான்பூர்-டெல்லி, சண்டீகர்-டெல்லி, ஐதராபாத்-சென்னை, நாக்பூர்-பிலாஸ்பூர், கோவா-மும்பை, நாக்பூர்-செகந்திராபாத் உள்பட மேலும் 9 வழித்தடங்களில் விரைவில் அறிமுகம் செய்ய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

Leave a Reply