பெண்களின் பாதுகாப்பிற்கு எளியவகை துப்பாக்கி. கான்பூர் அமைப்பு அறிமுகம்.

4

டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி பேருந்து ஒன்றில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்கு பின்னர் பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு மற்றும் தனியார் சமூக சேவை அமைப்புகள் பெரும் அக்கறை காட்டி வருகின்றன. கான்பூரை சேர்ந்த ஒரு நிறுவனம் பெண்களின் பாதுகாப்பிற்காக எளிதில் பயன்படுத்தக்கூடிய லைட்வெயிட் ரிவால்வர் ஒன்றை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

Kanpur Ordnance Factory என்ற நிறுவனம் நேற்று நடந்த ஒரு விழாவில் இந்த லைட் வெயிட் துப்பாக்கியை அறிமுகம் செய்தது. 500 கிராம் எடையுள்ள இந்த துப்பாக்கியை எளிதில் பெண்கள் தங்கள் கைப்பையில் மறைத்து வைத்துக்கொள்ளலாம். இந்த நிறுவனத்தின் தலைவர் M.C. Bansal அவர்கள் அறிமுக விழாவில் கூறும்போது “டெல்லி, லக்னோ, பாரபாங்கி ஆகிய மூன்று நகரங்களில் இந்த துப்பாக்கிகள் கிடைக்கும் என்றும் பெண்களுக்கு மட்டுமே இந்த துப்பாக்கிகள் சப்ளை செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த ரிவால்வரின் விலை ரூ.1.22லட்சம் ஆகும்.மிகச்சிறிய அளவில் இது வடிவமைக்கப்பட்டு இருப்பதால் இதை பெண்கள் தங்கள் பர்ஸ்களில் கூட வைத்துக்கொள்ளலாம். அவர்களுக்கு ஆபத்தான நேரத்தில் இந்த துப்பாக்கி பெரிதும் உதவிகரமாக இருக்கும். இந்த துப்பாக்கிக்கு Nirbheek என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply