ஐபிஎல் கிரிக்கெட் 2017: ஐதராபாத் அணியை வீழ்த்தியது டெல்லி

ஐபிஎல் கிரிக்கெட் 2017: ஐதராபாத் அணியை வீழ்த்தியது டெல்லி

கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச் தீர்மானித்தது. இதனால் முதல் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்தது. யுவராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 70 ரன்கள் குவித்தார்.

இந்த நிலையில் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 189 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 6 புள்ளிகளை பெற்றிருந்தாலும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது சந்தேகமே.

இந்த போட்டியில் டெல்லி அணியின் முகமது ஷமி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Leave a Reply