டெல்லி: புலி தாக்கி பலியான இளைஞரின் மனைவிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு?

tigerடெல்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மிருகக்காட்சி சாலையில் புலி தாக்கி அகால மரணமடைந்த இளைஞரின் மனைவி, தனக்கு ரூ.50 லட்சத்தை  இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி வெள்ளைப் புலி இருந்த பகுதிக்குள் போதையில் சென்றதாக கூறப்பட்ட ஒரு இளைஞரை அங்கிருந்த புலி ஒன்று தாக்கி கொன்றது. இந்த சம்பவம் பலரது முன்னிலையில் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், புலி தாக்கி இறந்த இளைஞரின் மனைவி, ரூ.50 லட்சம் தனக்கு  இழப்பீடாக  வழங்க வேண்டும் என்று கோரி டெல்லி  ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை டெல்லி ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது.  இது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், டெல்லி உயிரியல் பூங்கா நிர்வாகத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply