17 மணி நேரம் உழைத்தும் பலனில்லை: ஸ்விக்கி பணியாளர் புலம்பல்
ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியாவில் உள்ள அனைவருமே வீட்டில் முடங்கிக் கிடப்பதால் வீட்டிலேயே விதவிதமான பலகாரம் செய்து சாப்பிட்டு வருகின்றனர். இதனால் ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு நிறுவனத்தின் வருமானம் பெருமளவு குறைந்துள்ளது
டெல்லியில் உள்ள ஸ்விக்கி ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பணியாளர்கள் இதுகுறித்துப் பேசியபோது ’ஊரடங்கு உத்தரவு நேரத்தில் உணவு ஆர்டர்கள் மிகவும் குறைவாக வருகிறது. எங்களால் எங்களுடைய டார்கெட்டை நிறைவு செய்ய முடியவில்லை
நாளொன்றுக்கு 16 முதல் 17 மணி நேரம் நாங்கள் உழைக்கிறோம் இருப்பினும் எங்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்தால் மட்டுமே அவர்களது வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது