அடிமைச்சின்னமான தாஜ்மஹாலை இடிக்க வேண்டும். சமாஜ்வாடி எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

அடிமைச்சின்னமான தாஜ்மஹாலை இடிக்க வேண்டும். சமாஜ்வாடி எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

tajmahalஉலக அதிசயங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் முக்கிய சுற்றுலாபகுதியாகவும் இருந்து வரும் தாஜ்மஹால், அடிமையின் சின்னம் என்றும் அதை முதலில் இடித்து தள்ளவேண்டும் என்றும் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், உத்தரபிரதேச நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான அசம்கான் பேசிய சர்ச்சை பேச்சால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற ஒரு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர் அசம்கான், ”தாஜ்மகால் தற்போது உலகின் அபூர்வ நினைவுச் சின்னமாக இருக்கிறது. ஆனால், மக்கள் விஷம் வாங்கக்கூட பணம் இல்லாமல் இருந்த காலத்தில், அரசு பணத்தை முற்றிலும் தவறாக பயன்படுத்தி, மும்தாஜுக்காக வெள்ளை சலவைக்கற்களால் கட்டப்பட்டது.

அடிமை சின்னம் ஒன்றை இடித்து தள்ள வேண்டும் என்றால், முதலாவதாக தாஜ்மஹாலை இடித்து தள்ள வேண்டும். அதன்பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்றத்தையும் இடிக்க வேண்டும்.

தாஜ்மஹாலை இடித்து தள்ள முடிவெடுக்கப்பட்டால், அதை தலைமையேற்று நடத்துவதில் நான் முதலில் நிற்பேன்” என்று கூறியுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவரின் இந்த பேச்சுக்கு அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம தெரிவித்துள்ளனர்.

Chennai Today News: Demolish Tajmahal. samajvadi MLA contraversy speech

Leave a Reply