கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. தலைமை செயலக ஊழியர்களின் பரிதாப நிலை

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. தலைமை செயலக ஊழியர்களின் பரிதாப நிலை

secreatariatஇன்று சம்பள நாள் என்பதால் தலைமைச்செயலகம் பரபரப்புடன் காணப்பட்டது. தலைமை செயலகத்தில் பணிபுரியும் 5500 ஊழியர்களுக்கும் அவர்களுடைய வங்கிக்கணக்கில் சம்பள பணம் டெபாசிட் செய்துவிட்டதாக கூறப்பட்டாலும், அந்த பணத்தை அவர்களால் வங்கியில் சென்று எடுக்க முடியவில்லை

ஏடிஎம்-இல் எடுத்தால் 2000ரூபாய் தான் எடுக்க முடியும் என்பதால் அனனவரும் தலைமை செயல்கத்தில் இயங்கி வரும் வங்கிகளுக்கு சென்றனர். ஆனால் வங்கி அதிகாரிகளோ தற்போது மொத்த சம்பள பணத்தையும் எடுக்க முடியாது என்றும் தலைக்கு ரூ.10000 மட்டுமே தரமுடியும் என்று கூறினார்களாம்.

ரிசர்வ் வங்கி போதுமான பணத்தை வங்கிகளுக்கு தராததால் வங்கி ஊழியர்கள் திணறி வருகின்றனர். வங்கித்தரப்பில் இதுகுறித்து கூறியபோது, ‘ “எங்களுக்கு ரிசர்வ் வங்கி தந்ததே…முப்பது லட்சம்தான். நாங்கள்தான், கூடுதலாக வேண்டும் என்று சொல்லி அறுபது லட்ச ரூபாயை வரவழைத்திருக்கிறோம். இந்தப் பணத்தை வைத்து இன்றைய தேதியில் பகிர்ந்துதான் தரமுடியும். மேலும் பணம் வந்தால், நிச்சியமாக மீதிப் பணத்தை தருவோம். அதுவும் தவணை முறையாக கூட இருக்கலாம்”  என்று கூறியுள்ளனர். சம்பள பணம் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டும் அதை எடுக்க முடியாமல் உள்ளனர் ஊழியர்கள் என்பதுதான் பரிதாப நிலை

Leave a Reply