ஓய்வின்றி பணிசெய்த ஸ்டேப் பாங்க் கேஷியர் மாரடைப்பால் மரணம்.
பிரதமர் செல்லாது என்று அறிவித்த ரூ.500, ரூ.1000ஐ மாற்ற நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கும் நிலையில் வரிசையில் நின்ற பொதுமக்களில் ஒருசிலர் மயக்கமடைந்த செய்தியும் ஓரிரண்டு நபர்கள் மரணம் அடைந்த செய்தியும் வந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் தொடர்ச்சியான வேலை, மன அழுத்தம், ஓய்வு இல்லாத காரணத்தினால் வங்கி ஊழியர் ஒருவர் மரணம் அடைந்துள்ள சோக செய்தி கிடைத்துள்ளது.,
போபால் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கேஷியராக பணிபுரியும் 45 வயது புருஷோத்தமன் என்பவர் சனி, ஞாயிறு என ஓய்வு இல்லாமல் வங்கியில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு அவர் பணிபுரிந்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு வந்து மயக்கமானார்.
வங்கி ஊழியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றி கொடுக்க ஓய்வின்றி வங்கி ஊழியர்கள் பணியாற்றி வருவதால் மன அழுத்தத்திற்கு உண்டாகியிருப்பதையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.