மம்தா பானர்ஜி கங்கையில் குதிக்க வாய்ப்பு உள்ளது. பாஜக கிண்டல்
பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை ஆரம்பம் முதல் கடுமையாக எதிர்த்து வரும் மம்தா பானர்ஜி, பிரதமரின் முடிவுக்கு எதிராக பல அதிரடி போராட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் மேற்குவங்க பா.ஜனதா தலைவர் திலிப் கோஷ், மம்தா புத்தியை இழந்து விட்டதாக கடுமையாக தாக்கியுள்ளார்.
நேற்று கொல்கத்தாவில் பா.ஜனதா இளைஞர் அணி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கோஷ் பேசியபோது, ‘மோடியின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை மூலம் மம்தா பானர்ஜி கோடிக்கணக்கான பணத்தை இழந்து புலம்பி வருகிறார்.
ஏன் அவர் டெல்லி மற்றும் பாட்னா சென்றார். அங்கு சென்ற அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதனால் தலைமை செயலகத்திற்குள் சென்று உட்கார்ந்து கொண்டார். நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால், இறுதியில் அவர் கங்கையில் குதிக்கலாம். அவர் தனது புத்திய இழந்துவிட்டார். புத்தியை இழந்த அவரை நாங்கள் பார்க்க தயாராக இல்லை’’ என்று கிண்டலுடன் கூறியுள்ளார்.,