இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். ரூபாய் நோட்டு ஒழிப்பு குறித்து மேரிகோம்
ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை பல இந்திய தலைவர்கள், ரஜினி, கமல் உள்பட பல சினிமா நட்சத்திரங்கள், உள்நாட்டு வெளிநாட்டு சமூக ஆர்வலர்கள் ஆகியோர் பாராட்டி வரும் நிலையில் தற்போது பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் இந்த நடவடிக்கைக்கு பாராடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் ரூபாய் நோட்டுக்கள் மீதான தாக்குதல் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்றும், இது ஒரு மிகச்சிறந்த முடிவு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் இளையதளபதி விஜய் மட்டுமே ஒரு சிறிய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்ற அனைத்து பிரபலங்களும் மோடிக்கு ஆதரவாகவே கருத்து கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.