இந்தியாவை பார்த்து உலக நாடுகள் படித்தறிய வேண்டும். உலக வங்கியின் தலைமைச் செயலர்
கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு காரணமாக இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என உலக வங்கியின் தலைமைச் செயலர் கிறிஸ்டலினனா ஜார்ஜியாவா என்பவர் தெரிவித்துள்ளளார்.
இதுகுறித்து அவர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு கொடுத்துள்ள பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி இதர நாடுகள் படித்தறிய வேண்டியுள்ளது. இங்கே குறுகிய காலத்தில் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது. பணமதிப்பு நீக்கம் காரணமாக, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இந்தியா மாறியுள்ளதுடன், கருப்புப் பணப்புழக்கமும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், இந்திய அளவில் திடீர் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு, நாட்டு மக்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். இதனால், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாமல், புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் வரை மக்கள் அமைதி காத்தனர். இதனை நாம் பாராட்ட வேண்டும்.
குறுகிய கால நோக்கில் பார்க்கும்போது, பணமதிப்பு நீக்க நடவடிக்கை அவசியமற்றதாக தோன்றும். ஆனால், நீண்ட கால அடிப்படையில் பார்த்தோம் எனில், இந்தியப் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை எட்ட இந்த பணமதிப்பு நீக்கம் உதவும். இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பு எதையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.
இவ்வாறு உலக வங்கி தலைமைச் செயல் அதிகாரி கிறிஸ்டலினா ஜார்ஜியாவா தெரிவித்துள்ளார்.