ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நல்ல யோசனை அல்ல என்று கூறினோம்: ரகுராம் ராஜன்

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நல்ல யோசனை அல்ல என்று கூறினோம்: ரகுராம் ராஜன்
கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, என்னை கலந்து ஆலோசித்தது, ஆனால் நான் அந்த யோசனையை நல்ல யோசனை என்று கூறவில்லை என ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது தெரிவித்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள ஹார்வர்டு கென்னடி கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியின்போது பேசிய ரகுராம்ராஜன் கூறியாதாவது: ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, என்னை கலந்து ஆலோசிக்கவில்லை என்று நான் ஒருபோதும் கூறவில்லை. உள்ளபடியே, எங்களை கலந்து ஆலோசித்தனர். நாங்கள் அது நல்ல யோசனை அல்ல என்று கூறினோம்” 
ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு என்பது நன்கு திட்டமிடப்பட்ட, சிந்தித்து எடுக்கப்பட்ட, பயன் உள்ள நடவடிக்கை அல்ல. இந்த யோசனை முதலில் வந்தபோதே அரசிடம் கூறினேன். 87.5 சதவீத காகிதப்பணம் செல்லாது என அறிவிக்கப்படுகிறபோது, அதற்கு சமமான அளவுக்கு வேறு காகிதப்பணத்தை அச்சடித்து, புழக்கத்துக்கு விட தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும் என்றுதான் எந்த ஒரு பெரிய பொருளாதார வல்லுனரும் சொல்வார்கள். ஆனால் அது செய்யப்படவில்லை
இவ்வாறு ரகுராம்ராஜன் பேசினார்

Leave a Reply