டிமாண்டி காலனி இடித்து தரைமட்டம்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் பேய் நடமாட்டம் உள்ள காலனி என கூறப்படும் டிமான்டி காலனி நேற்று இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையின் மையப்பகுதியில் உள்ள இந்த டிமாண்டி காலனி 186 கிரவுண்ட் நிலத்தை கொண்டது. இந்த காலனி ஆதரவற்ற குழந்தைகள், விதவைப் பெண்களை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் வதந்தியை முற்றிலும் ஒழித்து கட்டும் விதமாக நேற்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் டிமான்டி காலனியை இடித்து தரைமட்டமாக்கினர்.
தற்போது சென்னை-மயிலாப்பூர் ஆர்ச் டயோசிஸ் நிர்வாகிகள் இதனை நிர்வகித்து வருகின்றனர். டிமான்டி காலணி இடிக்கப்பட்டது குறித்து அவர்கள் கூறுகையில், “சுமார் 186 கிரவுண்ட் நிலம் கொண்ட டிமான்டி காலனி, ஆதரவற்ற குழந்தைகள், விதவைப் பெண்களை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது. இந்த சொத்தை கையாள்வதில் நிறைய குளறுபடிகள் நிலவி வருகின்றன. அவற்றை தீர்த்து முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.