டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?

டெங்குக் காய்ச்சல், வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இந்தக் கிருமியை, ஏடிஸ் எஜிப்டி  என்ற கொசு பரப்புகிறது. வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடியது என்பதால், டெங்குக் காய்ச்சலுக்கு என்று குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை.

சாதாரணக் காய்ச்சல் கட்டம்

தலைவலி

திடீர் காய்ச்சல் (104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை செல்லும்)

ரத்தப் போக்கு

மூக்கு அல்லது பல் ஈறுகளில் ரத்தக் கசிவு

ரத்த வாந்தி

கறுப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல்

தசை மற்றும் மூட்டு வலி

வாந்தி

கடுமையான வயிற்று வலி

தோலில் சிவப்புப் புள்ளிகள்

தோலில் எரிச்சல்

வயிற்றுப்போக்கு

சிக்கலான கட்டம்

உயர் ரத்த அழுத்தம்

சுவாசப் பிரச்னை

வயிற்றில் ரத்தக் கசிவு

வயிற்றில் நீர்கோத்தல்

நோய் கண்டறிதல்

டெங்குவைக் கண்டறிதல் சிக்கலானது. இதன் அறிகுறிகள், கிட்டத்தட்ட மலேரியா, லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் தைராய்டு காய்ச்சலைப் போன்றே தெரியும். எனவே, இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், உடனடியாக மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

நோய்த் தடுப்பு

நோய்த் தடுப்பு மருந்துகள் இதற்கு இல்லை. ஆனால், டெங்குவைப் பரப்பும் கொசுவை ஒழிப்பதன் மூலம், இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.

டெங்குவைப் பரப்பும் கொசு, பகல் நேரத்தில் கடிக்கக்கூடியது. விடியற்காலை மற்றும் சூரியன் மறையும் மாலை நேரத்தில் அதிகமாகக் கடிக்கும். இந்த நேரத்தில் கொசுக் கடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பதன் மூலம், டெங்குக் காய்ச்சல் வராமல் தடுக்கலாம். ஜன்னல் – கதவுத் திரை, பூச்செடி, வீட்டில் எங்கு வேண்டுமானாலும் இது மறைந்திருக்கும்.

டெங்குக் கொசு வளர ஏற்ற இடங்கள்

வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்கும்படி கிடக்கும் பொருட்களில், ஏடிஸ் எஜிப்டி கொசு முட்டையிட்டு வளர்கிறது. இப்படி வீட்டைச் சுற்றி இருக்கக்கூடிய தேவையற்ற பொருட்கள்…

1. உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள்

2. தேங்காய்ச் சிரட்டை

3. பூந்தொட்டி

4. ஆட்டுக்கல்

5. உபயோகமற்ற பாட்டில்கள்

6. பழைய டயர்

இவற்றை அகற்றுவதன் மூலம், கொசு உற்பத்தியைத் தடுக்கலாம்.

டெங்கு செக் லிஸ்ட்

வீட்டுக்கு அருகில், ஒரு வாரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீட்டு உபயோகத்துக்குச் சேமித்து வைக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில், கொசு புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீட்டில் தண்ணீர் பிடித்துவைத்திருக்கும் பக்கெட் உள்ளிட்ட வற்றை வாரத்துக்கு ஒரு முறையாவது நன்றாகச் சுத்தப்படுத்துங்கள்.

செப்டிக் டேங்க் வென்டிலேஷன் குழாயில் நைலான் வலை கட்டி, கொசு உள்ளே புகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Leave a Reply