ரூ.5000க்கு மேல் டெபாசிட் செய்யவும் முடியாது. மத்திய அரசின் புதிய அறிவிப்பு

ரூ.5000க்கு மேல் டெபாசிட் செய்யவும் முடியாது. மத்திய அரசின் புதிய அறிவிப்பு

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் பிரதமர் மோடி அவர்களால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்பவர்கள், வரும் 30ஆம் தேதி வரை, தங்களது வங்கிக் கணக்கில் ரூ. 5000த்துக்கு மேல் ஒரு முறை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என்று மத்திய அரசு இன்று அதிரடியாக தெரிவித்துள்ளது. இதனால் கோடிக்கணக்கில் கருப்புப்பணம் வைத்துள்ளவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது

500, 1000 ரூபாய் நோட்டுக்கள மதிப்பு இழந்ததாக அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்த மாதம் 31ஆம் தேதி வரை வங்கியில் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுக்களை செலுத்த அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது. மேலும், தற்போது இந்த ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் மட்டுமே செய்ய முடியும், வங்கிகளில் மாற்ற முடியாது.

இந்நிலையில், வரும் 30ஆம் தேதி வரை மதிப்பிழந்த ரூபாய் நோட்டுக்களை ரூ. 5000த்துக்கு மேல் ஒருமுறை மட்டுமே ஒருவர் டெபாசிட் செய்ய முடியும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பான அறிவிப்புகளை இன்று மாலை மத்திய அரசு வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டின் பிரதம மந்திரி கரிப் கல்யான் யோஜனா வரி மற்றும் முதலீடு வரைமுறைக்கு உட்பட்டே இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Leave a Reply