தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஆறுதல் கூற சென்றார் ஓ.பி.எஸ்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஆறுதல் கூற சென்றார் ஓ.பி.எஸ்.


தூத்துகுடியில் நடைபெற்ற துப்பாக்கி சம்பவ நிகழ்ச்சியில் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்ட நிலையில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால் ஆளும் அரசின் சார்பில் முதல்வர், துணை முதல்வர் ஆறுதல் கூற வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தூத்துக்குடிக்கு சென்று அரசு மருத்துமவனையில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். துணை முதல்வருடன் அமைச்சர் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர்.

அதன் பின்னர் மருத்துவமனையில் இருந்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் துணை முதல்வர் அங்கு நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

Leave a Reply