சிப்’ உடன் கூடிய ‘டெபிட்’ கார்டு: ஸ்டேட் வங்கியின் புதிய முயற்சி
எஸ்.பி.ஐ வங்கி அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு வசதிகளை அளித்து வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ‘இ.எம்.வி., என்ற சிப்’ உடன் கூடிய புதிய, ‘டெபிட்’ கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு தர முடிவு செய்துள்ளது.
‘இரும்புத்திரை’ படத்தில் கூறியது போல கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஏராளமான மோசடிகள் நடந்து வரும் நிலையில் இதனை தடுக்கும் நோக்கில், அனைத்து வங்கிகளும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, இ.எம்.வி., எனப்படும், ‘ஈரோபே மாஸ்டர் கார்டு விசா’ சிப் பொருத்தப்பட்ட புதிய, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வழங்கும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தங்கள் பழைய டெபிட் கார்டுகளுக்கு பதில், புதிய டெபிட் கார்டுகளை பெற்றுக் கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி தற்போது கேட்டுக் கொண்டுள்ளது. இந்த வகை டெபிட் கார்டுகளும், அதனுடன் அளிக்கப்படும், ‘பின்’ எண்ணும், ‘ஸ்கிம்மிங்’ கருவி மூலம் மோசடி செய்ய முடியாதவை என்பது குறிப்பிடத்தக்கது..
இதுகுறித்து, எஸ்.பி.ஐ. தனது , ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியபோது, ‘புதிய மாற்றத்துக்கான நேரம் வந்துள்ளது. ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்படி, வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் பழைய டெபிட் கார்டுகளுக்கு பதில், ‘இ.எம்.வி., – சிப்’ பொருத்தப்பட்ட புதிய டெபிட் கார்டுகளை, வரும், டிச., 31க்குள் மாற்றிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். இதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது
எஸ்பிஐ, சிப், டெபிட் கார்ட், ஸ்கிம்மிங் கருவி, இ.எம்.வி சிப்