விஜய், சமந்தா நடிப்பில் விஜய்யின் 57வது படமாக உருவாகி வரும் கத்தி படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். வரும் தீபாவளி தினத்தன்று மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் இந்த படத்தின் டீஸர் கடந்த மாதமே வெளிவர வேண்டிய நிலையில் இன்னும் வெளிவராமல் இருப்பதன் ரகசியம் தற்போது கசிந்துள்ளது.
‘கத்தி’ படத்தின் டிசைனராக பணிபுரியும் கோபி மற்றும் பிரசன்னா ஆகிய இருவரும் ஏ.ஆர்.முருகதாஸின் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் முருகதாசின் பல படங்களுக்கு டிசைனராக பணியாற்றியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே திடீரென இவர்கள் இருவரும் கத்தி படத்தில் இருந்து விலகுவதாக முருகதாஸிடம் தெரிவித்துள்ளனர். இருவரும் இணைந்து சொந்தமாக பிசினஸ் செய்ய இருப்பதால் படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர். இதனால் முருகதாஸ் மற்றும் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவர்களுடைய விலகலால்தான் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதியே வெளிவர வேண்டிய டீசர் இன்னும் வெளியாகவில்லை. தற்போது புதிய டிசைனர் ஒப்பந்தம் ஆகி, வேலை நடந்து கொண்டிருப்பதாகவும், மிக விரைவில் கத்தியின் டீசர் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.