மகாராஷ்டிர மாநில புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு.

devendra fadnavisசமீபத்தில் தேர்தல் நடந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக அமோக வெற்றி பெற்றது. நேற்று அந்த கட்சியின் தேவேந்திர பட்னாவிஸ் முதல் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பாஜக தலைவர்களும் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். நாக்பூரில் பா.ஜனதா தொண்டர்கள் பட்டாசு வெடித்து இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

மும்பையில் நேற்று நடந்த பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மகாராஷ்டிர மாநில புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் அந்த மாநிலத்தின் 27வது முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். மராட்டியத்தின் பின்தங்கிய பகுதியாக விதர்பா மண்டலம் என்ற பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 4வது முதலமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சாரக தேர்வு செய்யப்பட்டதை அறிந்த நாக்பூர் பா.ஜனதா தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்களது மகிழ்ச்சியை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

புதிய முதலமைச்சா தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்ட செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த நாக்பூரில் உள்ள அவரது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா உடனடியாக நாக்பூரில் இருந்து மும்பை வந்து சேர்ந்தார். அவரது தாய் சரிதா இன்று (புதன்கிழமை) மும்பை வர உள்ளார். அவர்கள் 31–ந் தேதி நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

Leave a Reply