பிரபுதேவாவை பிடித்த நயன் செண்டிமெண்ட்
பிரபுதேவாவுக்கு நயனுக்கும் நெருக்கமான வரலாறு அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரபுதேவாவை இன்னொரு நயன் செண்டிமெண்ட் பிடித்து ஆட்டுகிறது. சமீபத்தில் அவர் எதை செய்தாலும் 9ஆம் தேதி அல்லது 9 மணிக்கு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து முடித்துள்ள ‘தேவி’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் 9வது மாதம் 9ஆம் தேதி 9மணி 9 நிமிடத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபுதேவா, தமன்னா, சோனு சூட், மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் எமிஜாக்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை பிரபுதேவா தயாரித்துள்ளார்.