அமெரிக்காவில் நெருப்பை கக்கும் பேய் மரம். அதிர்ச்சி வீடியோ இணைப்பு
பொதுவாக மரம் என்பது கார்பன் டை ஆக்சைடு உள்ளிழுத்து மனிதர்களுக்கு தேவையான ஆக்சிஜனை கொடுக்கும் என்றுதான் நாம் படித்துள்ளோம். ஆனால் அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணத்தில் காட்டில் உள்ள ஒரு மரம் நெருப்பை வெளியேற்றி வருவதாகவும், ஆனால் அந்த மரத்தில் இருந்து ஒரு சிறுபுகைக்கூட வரவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஓஹீயோ காட்டிற்கு கடந்த மாதம் சென்ற சுற்றுலாப்பயணிகளுக்கு இந்த எரியும் மரம் கண்ணில் பட்டுள்ளது. இந்த மரத்தை அவர்கள் வீடியோ எடுத்து யூடியூபில் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
இந்த மரத்தில் இருந்து நெருப்பு வெளியேறி கொண்டிருந்தாலும் புகை எப்படி வராமல் இருக்கின்றது என்பது அதிசயமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மரத்தை பேய்மரம் என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த மரத்தின் அடியில் உள்ள எரிமலைத்தீ, மரத்தின் இடுக்குகள் வழியாக வெளிவந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் மரத்தின் வெளிப்பகுதி எவ்வித சேதமும் அடையாமல் இருப்பது பெரும் வியப்பை தருவதாக உள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் இந்த அதிசயம் உங்களுக்கே புரியும்
Chennai Today News:Devil Tree burns from inside without Smoke