திருப்பதியில் இருந்து திருமலாவுக்கு இலவச பேருந்து. கொல்கத்தா பக்தர் காணிக்கை
திருப்பதியில் இருந்து திருமலாவுக்கு செல்லும் ஆந்திர மாநில பேருந்துகளில் அவ்வப்போது கட்டணங்கள் உயரந்து கொண்டே வருவதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் பக்தர்களின் அதிருப்தியை நீக்க திருப்பதி-திருமலா தேவஸ்தானம் ‘தர்ம் ரதம்’ என்ற பெயரில் இலவச பேருந்துகளை இயக்கி வருகிறது.
இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் வெங்கடாஜலபதி பக்தருமான பிரகாஷ் சவுத்ரி என்பவர் திருப்பதி-திருமலா தேவஸ்தானத்துக்கு இரண்டு புதிய பேருந்துகளை நேற்று காணிக்கையாக அளித்துள்ளார். சுமார் 25 லட்சம் மதிப்பிலான அந்த இரு பேருந்துகளும் உரிய பூஜைக்கு பின்னர் தேவஸ்தான அதிகாரிகளிடம் நேற்று முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
‘தர்ம ரதம்’ பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகள் கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு வரும் பக்தர்களை கட்டணமின்றி அழைத்து வர பயன்படுத்தப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.