திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதல்

திருப்பதி கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தினமும்  லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வருகிறார்கள். நேற்று 70 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தர்ம தரிசனத்துக்கு 21 மணி நேரம் பக்தர்கள் காத்துநின்றனர்.

வருகிற புதன்கிழமை 2014–ம் ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டு அன்று ஏழுமலையானை கும்பிட 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதே அவர்கள் திருப்பதியில் குவிய தொடங்கி விட்டனர். புத்தாண்டு தரிசனத்துக்கு வி.ஐ.பி.க்களும் ஏராளமானவர்கள் வருகிறார்கள்.

வி.ஐ.பி.க்களுக்காக தங்கும் அறைகள் இப்போதே முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருமலையில் உள்ள 8 ஆயிரம் அறைகளில் 1000 அறைகள் மட்டுமே சாதாரண பக்தர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மற்றவைகள் வி.ஐ.பி.க்களுக்கு இப்போதே முன்பதிவு செய்யப்பட்டு விட்டது.

புத்தாண்டு தினத்தில் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்து இருந்த போதிலும் அவர்களுக்கு தரிசனம் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.

Leave a Reply