பிரபல பக்தி பாடகர் பித்துக்குளி முருகதாஸ் மரணம்
பக்தி பாடல்களை பாடும் பிரபல பாடகர் பித்துக்குளி முருகதாஸ் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 95.
1000க்கும் மேற்பட்ட பக்திப்பாடல்களையும் பக்தியான திரையிசை பாடல்களையும் பாடியுள்ள பித்துக்குளி முருகதாஸ் கடந்த 1920ஆம் ஆண்டு கோவையில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் சுந்தரம் ஐயர் மற்றும் அலமேலு அம்மையார் ஆவர்.
தமிழகம், இந்தியா மட்டுமினிறி இவர் அமெரிக்கா, தென்னாப்ரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று பக்தி இசைக் கச்சேரிகளையும் முருகதாஸ் நடத்தியுள்ளார். குறிப்பாக தமிழ்க் கடவுளான முருகனின் பாடல்களை பாடுவதில் பெரும் விருப்பம் கொண்டவர்.
தியாகராஜர் விருது, சங்கீத சாம்ராட்,மதுரகானா மாமணி, சங்கீத நாடக அகாடமி விருது, குரு சூரஜானந்தா விருது உள்பட பல இசை விருதுகளை இவர் பெற்றுள்ளார். இவருக்கு கடந்த 1984ஆம் ஆண்டு கலைமாமணி விருது கொடுத்த தமிழக அரசு வழங்கி கவுரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.