தேவயானி விஷயத்தில் இந்தியாவின் அணுகுமுறை வேதனையளிப்பதாக நேற்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
நேற்று மாலை இந்திய பெண் தூதர் தேவயானி அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலமணி நேரங்களில் இந்தியாவில் பணிபுரியும் அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேருமாறு இந்தியா உத்தரவிட்டது. இதற்கு அதிரடி நடவடிகை தொடர்பாக நேற்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ஜென் பெஸ்கி, தேவயானி மீது அமெரிக்க சட்டதிட்டத்தின்படி முறையான விசாரணைதான் நடந்துவருகிறது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளது. ஆனால் இந்தியா இந்த நடவடிக்கைக்கு எதிர் நடவடிக்கையாக அமெரிக்க தூதரை வெளியேற்றும் நடவடிக்கை வேதனை அளிக்கிறது. இது இருநாட்டு உறவில் விரிசலை மேலும் அதிகமாக்குகிறது. இருநாட்டு உறவில் ஏற்பட்டு வரும் விரிசல் விரைவில் பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே தேவயானியிடம் பணிபுரிந்த பணிபெண் சங்கீதா, தேவயானி அமெரிக்காவில் இருந்து வெளியேறியவுடன் முதல்முறையாக சில புகார்களை தெரிவித்துள்ளார். தேவயானி வீட்டில் பணிபுரியும்போது தான் சரியான தூக்கம், சாப்பாடு இன்றி கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறினார்.