முதல்வர் உடல்நிலை எதிரொலி: போலீஸ் டிஜிபியின் அதிரடி உத்தரவு

முதல்வர் உடல்நிலை எதிரொலி: போலீஸ் டிஜிபியின் அதிரடி உத்தரவு

dgpதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நேற்று மாலை முதல் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அப்பல்லோ மருத்துவமனை வளாகம் மட்டுமின்றி சென்னை நகரமே அசாதாரண சூழ்நிலையில் உள்ளது.

நேற்றிரவு ஏழு மணிக்கு திடீரென கடைகள் அடைக்கப்பட்டது. வாகனப்போக்குவரத்தும் பெருமளவு குறைந்தது. மேலும் இரவுக்காட்சி சினிமா ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு ரெட் அலர்ட் செய்யப்பட்தால் விடுமுறையில் இருந்த அனைத்து காவல் துறை அதிகாரிகளும் இன்று காலை 7 மணிக்கு சீருடையில் கட்டாயம் பணிக்கு திரும்ப வேண்டும் என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இதனால், விடுமுறையில் சென்ற போலீசார் அவசர அவசரமாக இன்று பணிக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். மேலும், தமிழகம் முழுவதும் இன்று 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டாலும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் தேசிய பாதுகாப்பு படையினர் சென்னை வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply