அமெரிக்க ராணுவ படைக்கு தேவையான மருந்து பொருட்களை ஏற்றி கொண்டு டிஹெச் 8 என்ற சிறிய ரக விமானம் நேற்று கொலம்பியா வழியாக சென்றது. இதில் பைலட் உள்பட 6 பேர் இருந்தனர். பனாமா எல்லை பகுதி கொலம்பியா கபூர்கானா நகரம் அருகே அதிகாலை 1 மணியளவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென பழுதாகி விழுந்து நொறுங்கியது.
இதில் அமெரிக்கர்கள் 4 பேர் பலியானார்கள். 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ஆபத்தான நிலையில் பொகோடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் கொலம்பிய ராணுவ வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.