மாணவர்களுக்கும், நடிகர்களுக்கும் தயாரிப்பாளர் தனஞ்செயன் வேண்டுகோள்

மாணவர்களுக்கும், நடிகர்களுக்கும் தயாரிப்பாளர் தனஞ்செயன் வேண்டுகோள்

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த நிலையில் இன்று போலீசார் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். இருந்தும் இன்னும் ஒருசில மாணவர்கள் போராட்டத்தை தொடர்வோம் என்று கூறி மெரீனாவில் இருந்து வெளியேற மறுக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் போராட்டக்காரர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். நீங்கள் மாபெரும் வெற்றி அடைந்துள்ளீர்கள். உங்களை உலகமே பாராட்டி வருகிறது. ஒரு அரசே சட்டத்தை மாற்றும் வகையில் உங்களது போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. மேலும் நிரந்தமான ஒரு வெற்றியை அடைய அடுத்தகட்டமாக சட்டரீதியாக போராட வேண்டும். அதை நோக்கி பயணிப்போம். அதை விட்டுவிட்டு போராட்டத்தை தொடர்வதால் பிரச்சனைகள்தான் அதிகமாகும்.

மேலும் இந்த தருணத்தில் சினிமா பிரபலங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கின்றேன். இதுவரை மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தது சரியானது. இனிமேல் அவர்களை கலைந்து போகும்படி நடிகர்கள் அறிவுறுத்த வேண்டுமே தவிர, மாணவர்கள் கலைந்து செல்ல வேண்டாம், உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கின்றோம் என்று கூற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்களோடு நாங்கள் என்றும் இருப்போம், நமது பாரம்பரியமான ஜல்லிக்கட்டை காப்பாற்ற அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம் என்று மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி கலைந்து போக அறிவுரை கூறுங்கள் என்று தனஞ்செயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply