தனுஷ்-அக்ஷராஹாசன் நடிக்கும் இந்திப்படம் இன்று தொடக்கம்.

தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்த தனுஷ், பாலிவுட்டில் அறிமுகம் ஆன ராஞ்சன்னா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், தற்போது மேலும் ஒரு இந்திப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அமிதாப்பச்சனை வைத்து “‘பா” என்னும் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் பால்கி, இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் அமிதாப் நடிக்க இருப்பதால், தனுஷ் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகம் ஆகிறார்.

இசைஞானி இளையராஜா இசையில் உருவாக இருக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவை பி.சி.ஸ்ரீராம் கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நாசிக் அருகில் உள்ள மலைப்பிரதேசமான இகாட்புரி என்ற இடத்தில் தொடங்குகிறது. இந்த தகவலை தனுஷ் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply