தனுஷ்-கீர்த்தி சுரேஷ் படத்தின் டைட்டில் ‘ரயில்’?
தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை எனினும் பிரபுசாலமன் இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள ஆக்சன் த்ரில்லர் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு ‘ரயில்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்த படம் முழுக்க முழுக்க ரயிலில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பூச்சியப்பன் என்ற ரயில்வே கேண்டீனில் பணிபுரியும் ஊழியராக தனுஷ் நடித்துள்ளார்.
ரயிலில் பயணம் செய்யும் கேரள பெண்ணாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இருவருக்கும் இடையே எப்படி காதல் மலர்ந்தது, அந்த காதலுக்கு குறுக்கே வரும் பிரச்சனை என்ன என்பதை விறுவிறுப்புடன் பிரபுசாலமன் இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்காக ரயில்போன்ற செட் போட்டு, உண்மையான ரயிலும் மாறி மாறி படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தபடம் வரும் மார்ச் மாதம் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.