தனுஷ் எனக்காக வருத்தப்பட்டார். அமலாபால்

தனுஷ் எனக்காக வருத்தப்பட்டார். அமலாபால்

இயக்குனர் விஜய் -நடிகை அமலாபால் தம்பதியினர் சமீபத்தில் பிரிவது என்று முடிவு செய்து விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய பிரிவிற்கு நடிகர் தனுஷ் காரணம் என சமூக வலைத்தளத்தில் வதந்தி பரவி வந்தது.

இந்த வதந்திக்கு நடிகை அமலாபால் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எங்களுடைய விவாகரத்துக்கும் தனுஷூக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவர் எங்கள் இருவருக்கும் நல்ல நண்பர். உண்மையில் நான் விஜய்யை பிரிய முடிவு செய்தபோது எனக்காக அவர் வருத்தப்பட்டார். எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க சமரச பேச்சு நடத்தினார்.

உண்மை இவ்வாறு இருக்கும் நிலையில் தனுஷையும் என்னையும் சேர்த்து வைத்து பேசுவது வருத்தம் அளிக்கிறது’ என்று அமலாபால் கூறியுள்ளார்.

Leave a Reply