விஜய் தாயாருக்கு தனுஷ் தெரிவித்த பாராட்டு எதற்கு?

விஜய் தாயாருக்கு தனுஷ் தெரிவித்த பாராட்டு எதற்கு?

இளையதளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், பல திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார் என்பது தெரிந்ததே. அதேபோல் அவர் ஒரு நல்ல கர்நாட சங்கீத பாடகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வருடமும் சென்னையில் டிசம்பர் மாதம் நடைபெறும் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் இனிய குரலால் பாடல்களை பாடி வருபவர். விஜய், உள்நாட்டில் இருந்தால் தவறாது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.

இந்நிலையில் நேற்று சென்னை காமராஜ் அரங்கில் நடந்த சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் ஷோபா சந்திரசேகர் பாடினார். விஜய் வெளிநாட்டில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், ஷோபாவுக்கு தனது பாராட்டுதல்களை தெரிவித்தார்.

Leave a Reply