தொடரி ஆடியோ வெளியீடு. தனுஷ், கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டனர்.
தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘தொடரி’ திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று இந்த படத்தின் ஆடியோ வெளியானது. சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், பிரபுசாலமன், தயாரிப்பாளர் ஜி.தியாகராஜன், சின்னி ஜெயந்த், பார்த்திபன், மனோபாலா, வசந்தபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தனுஷ் இந்த படத்திற்காக செய்த கடின உழைப்பு, ரயில் சண்டைகளில் எடுத்த ரிஸ்க், ஆகியவை குறித்து படக்குழுவினர் பாராட்டி பேசினர். இறுதியில் பாடல்கள் வெளியானது. இந்த படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் உள்ளது. அனைத்து பாடல்களையும் யுவபாரதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1. அடடா இது என்ன” என்று தொடங்கும் பாடல்: பாடியவர்கள் ஹரிச்சரண், வந்தனா ஸ்ரீனிவாசா
2. ஊரெல்லாம் கேட்குதே” என்று தொடங்கும் பாடல்: பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், மரியாரோ.
3. ‘மனுஷனும் மனுஷனும்’ என்று தொடங்கும் பாடல்: பாடியவர்: கானாபாலா, பாடலாசிரியர்: யுவபாரதி
4. போன உசுரு வந்துருச்சு’ என்று தொடங்கும் பாடல்: பாடியவர்: ஹரிச்சரண், ஸ்ரேயா கோஷல்,
பாடல் வெளியீட்டிற்கு பின்னர் இந்த படத்தின் டிரைலரும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
ஒரே நாளில் ‘தொடரி’ டப்பிங்கை முடித்து தனுஷ் சாதனை