ரஜினி முதலிடம். தனுஷ் இரண்டாமிடம். டுவிட்டரில் சாதனை

ரஜினி முதலிடம். தனுஷ் இரண்டாமிடம். டுவிட்டரில் சாதனை
rajini
பாலிவுட் நடிகர், நடிகைகளை பின்பற்றி தற்போது கோலிவுட்டில் உள்ள அனைத்து நடிகர், நடிகைகளும் டுவிட்டரில் கணக்கு தொடங்கி மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை பெற்று பிரபலம் அடைந்து வருகின்றனர். தங்கள் படங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் டுவிட்டரில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர்களில் டுவிட்டரில் 2 மில்லியன்களுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்திருக்கும் ஒரே நடிகர் என்ற பெருமையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே இதுவரை பெற்றிருந்தார். அவருடைய டுவிட்டரை 2.34 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். ஆனால் இந்த பெருமையை அவருடைய மருமகனும், பிரபல நடிகருமான தனுஷ் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார்.

நேற்று வரை தனுஷின் டுவிட்டரில் 2 மில்லியன் பேர் ஃபாலோயர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இரண்டு மில்லியன் டுவிட்டர் ஃபாலோயர்களை பெற்ற நடிகர்களில் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகிய இருவர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இதுகுறித்து கருத்து கூறியிருந்த தனுஷ், ‘2 மில்லியன் ஃபாலோயர்ஸ் என்ற பெருமையை கொடுத்த அனைவருக்கும் நன்றி. என்னை நேசிக்கும், வழிகாட்டும், ஊக்குவிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

தனுஷ் தற்போது ‘விஐபி 2’, பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்துவிட்டு துரைசெந்தில்குமார் இயக்கத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் ஒரு படமும், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படமும், பாலிவுட்டில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

Leave a Reply