ஒரே நாளில் மோதுகிறது தனுஷ்-சிம்பு-சிவகார்த்திகேயன் படங்கள்
நீண்ட இடைவெளிக்கு சிம்புவின் ‘வாலு’ திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே நேரத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினிமுருகன்’ படத்தையும் இதே தேதியில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே ஜூலை 17ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த தனுஷின் ‘மாரி’ திரைப்படம் தள்ளிப்போக வாய்ப்பு இருந்ததாக கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவலை இயக்குனர் பாலாஜி மோகன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் மறுத்துள்ளார். எத்தனை படங்கள் வந்தாலும் திட்டமிட்டபடி ‘மாரி’ ஜூலை 17ல் ரிலீஸ் ஆகும் என்று அறிவித்துள்ளார். எனவே வாலு, மாரி ஆகிய இரு படங்களும் நேருக்கு நேர் மோதுவது உறுதியாகியுள்ள நிலையில் இந்த போட்டியில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்வார் என்று கூறப்படுகிறது.
சிம்பு-ஹன்சிகா நடித்த வாலு, தனுஷ்-காஜல் அகர்வால் நடித்த மாரி, சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரஜினிமுருகன்’ ஆகிய மூன்று படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவுள்ளதால் இம்மூன்று நடிகர்களின் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.