தேசிய விருது மற்றும் பிலிம்பேர் விருதை பெற்ற நடிகர் தனுஷுக்கு மீண்டும் ஒரு விருது கிடைத்துள்ளது. அவர் நடித்த ராஞ்சன்னா என்ற இந்தி படத்துக்கு இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அசோசியேஷன் விருது (IIFA) கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள புளோரிடோ மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தனுஷுக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்தி மொழியின் சிறந்த புதுமுக நடிகர் என்ற பிரிவிற்காக தனுஷ் இந்த விருதினை பெற்றார். இதுகுறித்து தனுஷ் டுவிட்டரில் தெரிவித்தபோது “இந்த விருது கிடைக்க காரணாமாக இருந்த கோடானு கோடி ரசிகர்களுக்குத்தான் நான் கடமைப்பட்டுள்ளேன். அவர்களுடைய ஊக்கமும் ஒத்துழைப்பு இல்லாமல் எனக்கு விருது கிடைத்திருக்க வாய்ப்பில்லை. தேசியவிருது, போன்ற விருதுகளை விட ரசிகர்களின் மனதில் நிற்கும் விருதுதான் எனக்கு மிக மிக பெரியது” என்று கூறியுள்ளார்.
தற்போது பால்கியின் இயக்கத்தில் இரண்டாவது இந்தி படத்தில் நடித்து வரும் தனுஷ் தமிழிலும் பிசியாக உள்ளார். இவர் நடித்து வெளியாகவுள்ள அடுத்த திரைப்படம் வேலையில்லா பட்டதாரி ஆகும். இந்த படத்திற்கு அவரது ரசிகர்களிடம் இருந்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.