தனுஷின் கொடி ‘கூடங்குளம் அணு உலை கதையா?
தனுஷ் நடித்து முடித்துள்ள ‘கொடி’ மற்றும் ‘தொடரி’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ‘தொடரி’ ரயிலில் நடைபெறும் கதை என்பது அனைவரும் தெரிந்ததே. இந்நிலையில் ‘கொடி’ படத்தின் கதை குறித்து இதுவரை வெளிவராத தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த சில வருடங்களாக தென் தமிழ்நாட்டில் உள்ள ஒரு இடத்தில் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரபல சமூக ஆர்வலர் உதயகுமார் இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி வருகிறார். இந்நிஅலியில் அதேபோன்ற கதைதான் தனுஷின் ‘கொடி’ படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், அணு உலையை எதிர்க்கும் கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதன்முதலாக இரு வேடங்களில் அதாவது அண்ணன், தம்பி கேரக்டரில் நடித்துள்ள தனுஷூக்கு த்ரிஷா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஜோடியாக நடித்துள்ளனர். த்ரிஷா இந்த படத்தில் அரசியல்வாதியாகவும் இளையதளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தன்ஷின் ஆலோசகராகவும் நடித்துள்ளனர்.
‘எதிர்நீச்சல், ‘காக்கி சட்டை’ பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்