100வது போட்டியில் 100 ரன்கள் அடித்து அசத்திய தவான்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தனது நூறாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்திய அணியில் நூறாவது போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் எட்டியுள்ளார். சர்வதேச அளவில் 9வது வீரராக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய தவான், இதுவரை 100 ஒருநாள் போட்டியில் விளையாடி 4300(+) ரன்கள் எடுத்துள்ளார். இதில் 13 சதங்களும், 25 அரைசதங்களும் அடங்கும்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த் இந்திய அணி 35.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. கேப்டன் விராட் கோலி 75(83) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய தவான் சதம் அடித்து அசத்தினார். தவான் 107(102), ரகானே 5(8) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்த தொடரில் ஏற்கனவே, செஞ்சூரியன்(51*), கேப்டவுன்(76) ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். கேப்டன் விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியில் தவான் தான் அதிக ரன்கள் எடுத்துள்ளார்.