சந்தானம் நடித்த ‘தில்லுக்கு துட்டு’ ரிலீஸ் தேதி
சந்தானம் ஹீரோவாக நடித்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் காமெடி வேடங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தற்போது ஹீரோவாக மட்டும் நடித்து வருகிறார்.
சந்தானம் தற்போது ‘தில்லுக்கு துட்டு’, சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் தற்போது ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஜூலை 24-ல் வெளியாகும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.
சந்தானம், ஷனன்யா, கருணாஸ், மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், சிங்கமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை லொள்ளுசபா ராம்பாலா இயக்கியுள்ளார்.