சென்னை அணியின் தடைக்கு தாவூத் இப்ராஹிம் காரணமா? திடுக்கிடும் தகவல்

சென்னை அணியின் தடைக்கு தாவூத் இப்ராஹிம் காரணமா? திடுக்கிடும் தகவல்
dhoni
வரும் 2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் தடை விதிக்கப்பட்ட சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாட முடியாததால், அதற்கு பதிலாக மேலும் இரண்டு அணிகள் சேர்த்து கொள்ளபடும் என பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் ஐசிசி தலைவர் என். ஸ்ரீனிவாசனை இந்திய அணியின் கேப்டன் தோனி, மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அவர்களும் அடுத்தடுத்து சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அணி குறித்து ஸ்ரீனிவாசனுடன் தோனி மற்றும் சுப்பிரமணியன் சுவாமி தனித்தனியாக ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்புக்கு பின்னர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, ” சென்னை அணியின் தடையை நீக்க நீதிமன்றத்தில் வாதாடுவேன்.  சென்னை அணி மீதான புகார் பின்னணியில்  தாவூத் இப்ராகிமின் சதித்  திட்டம் உள்ளது. இதற்கான இ-மெயில் ஆதாரம்  என்னிடம் உள்ளது. சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மீது எந்த தவறும் கிடையாது. ஸ்ரீனிவாசன் குறித்து கோர்ட்டில் பொய்யான தகவல் கூறப்பட்டு உள்ளது. சென்னை அணியை முடக்க சதி நடக்கிறது.இது தொடர்பான முக்கியமான தகவலை வருகிற 16- ம் தேதி நான் வெளியிடுவேன் அதை நான் இப்போது கூற முடியாது” என்று தெரிவித்தார்.

புதிதாக உருவாக்கப்படும் இரண்டு அணிகளில் ஒன்றில் தோனி கேப்டனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply