ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் ஆகிறார் தோனி?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு தடைசெய்யப்பட்டுள்ளதால் அந்த அணியின் கேப்டன் வேறு அணிக்கு மாற்றப்படுவார் என்று செய்தி வெளியாகியிருக்கும் நிலையில், தோனியே ஒரு புதிய அணியை வாங்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
வரும் 2016ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு பதிலாக புதியதாக உருவாகவிருக்கும் இரண்டு அணிகளில் ஒன்றை தோனி வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தோனி, ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் நடத்தப்படும் ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பங்கேற்கும், ராஞ்சி ரேய்ஸ் அணியை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வரும் டிசம்பர் எட்டாம் தேதி ஏலம் விடப்பட உள்ள இரண்டு புதிய அணிகளில் ஒன்றை, தோனி வாங்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
English Summary: Dhoni desire to buy a new IPL team?
[carousel ids=”74001,73042,63400,54192,35495,34748,24236,5583,7575,8561,8947,9575,10755″]