ராணுவ வீரர் உடையில் பத்மபூஷன் விருதினை பெற்ற தல தோனி
2011ஆம் ஆண்டு இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுதந்த தல தோனிக்கு நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் பத்மபூஷன் விருதினை வழங்கினார். இந்த விருதினை தோனி, ராணுவ உடையில் மிடுக்காக தோன்றி பெற்றுக்கொண்டார்
தோனி ஏற்கனவே ராணுவ லெப்டினெண்ட் கர்னல் பதவியில் இருப்பதால் அவருக்கு இந்த உடை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தோனி ஏற்கனவே 2008, 2009 ஆம் ஆண்டிற்கான ஐசிசி-க்கான ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருது, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது(2007), பத்ம ஸ்ரீ விருது(2009) ஆகியவற்றை தோனி பெற்றிருக்கிறார்.