கியாரே செட்டிங்கா? இணையத்தில் வைரலாகும் தல தோனியின் வசனம்

கியாரே செட்டிங்கா? இணையத்தில் வைரலாகும் தல தோனியின் வசனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானபோது அதில் ரஜினி பேசிய வசனமான ‘கியாரே செட்டிங்கா’ வசனம் உலகம் முழுவதும் பிரபலமானது

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் தற்போது மீண்டும் ஐபிஎல் களத்தில் இறங்கியுள்ள தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ‘கபாலி’ படத்தின் வசனங்களை பேசிய வீடியோ ஒன்றை ‘கபாலி’யின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் தல தோனி ‘கியாரே செட்டிங்கா? என்ற வசனத்தை ரஜினியின் ஸ்டைலில் பேசியுள்ளார். அதேபோல் காலா வில்லன் நானா படேகர் ‘காலா என்ன பேருய்யா இது’ என்ற வசனத்தையும், ‘காலன் கரிகாலன்’ என்ற வசனத்தை ஹர்பஜன்சிங்கும், பேசியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply